ஆணிய புடுங்க வேண்டாம்!!!

ஆணிய புடுங்க வேண்டாம்!!!

நேரம், காலம், எங்கே, எப்போது என்று இல்லாமல் வாகன ஓட்டிகளின் எரிச்சலைத் தூண்டும் ஒரே விஷயம் 'பஞ்சர்.’ காரில் செல்பவர்களுக்கு உடனடி உதவியாக ஸ்டெப்னி இருக்கும். ஆனால், பைக் ஓட்டிகளின் நிலைதான் பரிதாபமானது. அவர்கள் எப்படியாவது பஞ்சர் கடையைத் தேடியே ஆக வேண்டும். இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக வந்ததுதான் 'ட்யூப்லெஸ்’ டயர். இது, பஞ்சராகி டயரில் காற்று குறைய ஆரம்பிக்கும்போது, டயரில் குத்தி உள்ள ஆணியை அகற்றாமலே 200 கி.மீ வரை பயணத்தைத் தொடர முடியும். பின்பு, நமக்கு வசதியான நேரத்தில், இடத்தில் ஆணியை அகற்றி ட்யூப்லெஸ் டயரை சரிசெய்து கொள்ளலாம். மேலும், ட்யூப்லெஸ் டயரில் நாமே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியும் என்பதுதான் விசேஷமே. அது எப்படி என்பதை விளக்குகிறார் கோவையைச் சேர்ந்த மெக்கானிக் வாசுதேவன்.

அசத்த வரும் அம்சங்கள்!

அசத்த வரும் அம்சங்கள்!

கண்டுபிடிப்பு என்றால், இன்னொரு காரைக் கண்டுபிடிப்பது அல்ல. புதிதாக தொழில்நுட்பங்களை உருவாக்குவதுதான். ஏனென்றால், புதிய தொழில்நுட்பங்கள்தான் நிறுவனத்தின் மீதுள்ள மரியாதையை அதிகரிக்கும். மேலும், மற்ற நிறுவனங்களுக்கு முன்பே வெற்றிகரமாக இயங்கும் ஒரு தொழில்நுட்பத்தைத் தயாரித்துவிட்டால், பிறகு எளிதாக கார்களை விற்பனை செய்ய முடியும். உதாரணமாக, டொயோட்டா நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணம், அதன் ஹைபிரிட் காரான ’ப்ரையஸ்' என்று சொல்லலாம். ’ப்ரையஸ்' போன்ற ஒரு வெற்றிகரமான எலெக்ட்ரிக் காரை தயாரிக்கிறேன் எனச் சொல்லியே... தன் இமேஜையும், கார் விற்பனையையும் கூட்டிக்கொண்டது டொயோட்டா. அதுபோல, பல நிறுவனங்கள் தங்கள் உழைப்பையும் நேரத்தையும் முதலீடு செய்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் சில தொழில்நுட்பங்களையும், வசதிகளையும் கீழே பட்டியலிட்டு இருக்கிறோம்.

மாற்றுத் திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்?

மாற்றுத் திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்?

மாற்றுத் திறனாளிகள் வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியுமா?’ மோட்டார் விகடனுக்கு அடிக்கடி வரும் இந்தக் கேள்வியை சென்னை, கே.கே.நகரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் முன்பு வைத்தோம். அதிகாரிகள் கொடுத்த பதில் இங்கே: ''மாற்றுத் திறனாளி முதலில் அரசு மருத்துவரிடம் மாற்றுத் திறனாளிக்கான உறுதிச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். சான்றிதழில், அவர் எத்தனை சதவிகிதம் குறைபாடுகள் கொண்டவர் என்பது கட்டாயம் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி ஆனவர், நாற்பது சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளார் என்றால், அரசு விதிப்படி போக்குவரத்துத் துறையில் மாற்றுத் திறனாளியாக கணக்கில் கொண்டுவரப்பட மாட்டார்.

... 124 125 126 127 128 Displaying 1241 - 1250 of 1271