மோட்டார் விகடன் ஏப்ரல் 2018 இதழில்... * ஃப்ரிஸ்டைல்... ஃபோர்டின் புது ஸ்டைல்! FORD FREESTYLE - FIRST DRIVE REPORT! * டிசைன், இன்ஜின், சஸ்பென்ஷன்... எல்லாமே புதுசு! TVS APACHE RTR 160 4V - FIRST RIDE REPORT!
மாற்றுத் திறனாளிகள் வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியுமா?’ மோட்டார் விகடனுக்கு அடிக்கடி வரும் இந்தக் கேள்வியை சென்னை, கே.கே.நகரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் முன்பு வைத்தோம். அதிகாரிகள் கொடுத்த பதில் இங்கே: ''மாற்றுத் திறனாளி முதலில் அரசு மருத்துவரிடம் மாற்றுத் திறனாளிக்கான உறுதிச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். சான்றிதழில், அவர் எத்தனை சதவிகிதம் குறைபாடுகள் கொண்டவர் என்பது கட்டாயம் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி ஆனவர், நாற்பது சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளார் என்றால், அரசு விதிப்படி போக்குவரத்துத் துறையில் மாற்றுத் திறனாளியாக கணக்கில் கொண்டுவரப்பட மாட்டார்.
தேடி வந்த உங்ககிட்டே ஒரு விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுறேன். இந்த சொஸைட்டியில கொஞ்சம் அதிரடி கோணத்துல பார்க்கப்படுற விஷயங்கள்ல, வொர்க்ஷாப் தொழிலும் ஒண்ணு! ஸ்பேனரும் டீசலுமா திரிஞ்சாலும்கூட போக்கிரித்தனமான ஆளுங்க கிடையாது நாங்க. லட்சக்கணக்குல செலவு பண்ணி ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிச்சவங்களால தீர்க்க முடியாத பிரச்னையை, ஒரு படிக்காத அனுபவசாலி மெக்கானிக் பொசுக்குன்னு தீர்த்துவெச்சுடுவான். அதனால, வெறும் அதிரடிப் பேர்வழியா பார்க்குற பார்வையை மக்கள் மாத்திக்கணும். அதே நேரத்துல, நாம என்ன கொடுக்கிறோமோ, அதேதான் நமக்குத் திருப்பிக் கிடைக்கும்கிறதை சக மெக்கானிக் தோழர்களும் புரிஞ்சுக்கணும்!'' என அனுபவம் பேசுகிறார் ரமேஷ்குமார்.
''ஆட்டோமொபைல் துறையில் சாதிக்கணும்னு துடிப்பு இருக்கு. ’ப்ளஸ் டூ’வில் நல்ல மார்க் எடுத்து இருக்கேன். ஆனா, எந்த காலேஜை செலக்ட் செய்யறதுன்னுதான் ஒரே குழப்பமா இருக்கு!' எனத் தவிக்கும் மாணவரா நீங்கள்? இதோ, உங்களுக்காகவே ஆட்டோமொபைல் துறையில் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? நுழைவுத் தேர்வு முதல் சர்ட்டிஃபிகேட் கோர்ஸ் வரை அனைத்துத் தகவல்களையும் விரிவாகக் கூறுகிறார் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டிசைன் பிரிவுத் தலைவர் க.சத்தியசீலன்.
கோவையில்தான் தமிழகத்தில் முதன் முதலாக புல்லட் பைக்கின் பெட்ரோல் இன்ஜினுக்குப் பதில், டீசல் இன்ஜினைப் பொருத்தி, வெற்றிகரமாக ஓட்டிக் காட்டினார்கள். அதன் பின்புதான் விழித்துக்கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தானே டீசல் இன்ஜினைப் பொருத்தி விற்பனை செய்தது. இப்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் டீசல் புல்லட் விற்பனையை நிறுத்தி விட்டாலும், கோவையில் அந்த வேலை நிற்கவில்லை. இன்னும் தமிழக சாலைகளில் டீசல் புல்லட்டுகளின் உறுமல் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
மே மாத டாப் டென் கார்கள் விற்பனைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது மாருதி ஸ்விஃப்ட் டிசையர். மே மாதம் இந்தியா முழுக்க 18,953 ஸ்விஃப்ட் டிசையர் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஸ்விஃப்ட் இரண்டாம் இடம் பிடிக்க, எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஆல்ட்டோ மூன்றாவது இடத்துக்குப் பின் தங்கியிருக்கிறது.
ஆட்டோமொபைல் மார்க்கெட்டில், தீண்டத்தகாதது போலப் பார்க்கப்பட்டவை, பிக்-அப் ட்ரக் வாகனங்கள். ஆனால், இப்போது கார், பைக் மார்க்கெட் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், வளர்ச்சிப் பாதையில் முதல் இடத்தில் இருப்பது பிக்-அப் ட்ரக்குகள்தான். தற்போது ஆண்டுக்கு 2 லட்சம் வாகனங்கள் விற்பனையாகும் நிலையில், 2023-ம் ஆண்டுக்குள் பிக்-அப் ட்ரக் விற்பனை 8 லட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால், இப்போது பிக்-அப் ட்ரக் மார்க்கெட்டுக்குள் சர்வதேச நிறுவனங்களும் வர ஆரம்பித்திருக்கின்றன.
நேற்று Circuit de la Sarthe டிராக்கில் பயிற்சியில் இருந்தது ஆடி டீம். ஆடியிடம் இருந்த மூன்று Audi R18 E-tron Quattro கார்களில் முதல் சேஸி காரை ஓட்டிக்கொண்டிருந்தார் Loic Duval. அப்போது டிராக்கின் 'Porsche Curves' பகுதியில் ஓட்டிக்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சுவற்றில் அதிவேகமாக மோதி தூள்தூளானது ஆடி R18. காரின் பின்பக்கம்தான் அதிகம் சேதமானது. அருகிலேயே ரேஸ் மார்ஷல்கள் இருந்ததால் டிரைவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு...
நிஸானின் பட்ஜெட் பிராண்டான டட்ஸனின் கோ விற்பனைக்கு வந்து மூன்று மாதங்கள் முடியப்போகிறாது. மாதத்திற்கு இந்தியா முழுக்க 2000 கோ கார்களை விற்பனை செய்துவரும் நிஸான், கோ-வில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலை விற்பனைக்கு கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது.
ரேஸின் முடிவில் போனி தாமஸ் முதல் இடத்தையும், அங்கத் சிங் மத்ரூ இரண்டாவது இடத்தையும் அனிந்தித் ரெட்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திக் தரணி ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் புள்ளிகளில், அங்கத் சிங் மத்ரூ 54 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 43 புள்ளிகளுடன் போனி தாமஸ் இரண்டாவது இடத்திலும், 35 புள்ளிகளுடன் அனிந்தித் ரெட்டி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். கார்த்திக் தரணி 16 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்தில் உள்ளார்.
4 மீட்டர்களுக்குள், 4 மீட்டர்களுக்கு மேல் என இரண்டு விதமான மாடல்களில் அடுத்த தலைமுறை பொலெரோ விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது. ஸ்பை படங்களை வைத்துப்பார்க்கும்போது இந்த ப்ரோட்டோடைப்பில் முன்பக்க க்ரில் பார்ப்பதற்கு மஹிந்திரா XUV500 காரைப்போலவே இருக்கிறது. இதற்குமுன் இணையத்தில் வெளியான ஸ்பை படங்களில் பின்பக்கம் ஸ்பேர் வீல் மாட்டப்பட்டு இருந்தது. ஆனால், இந்த ஸ்பை படங்களில் ஸ்பேர் வீல் இல்லாததால் காரின் உண்மையான பின்பக்க தோற்றமும், நீளமும் புலப்படுகிறது. பின்பக்க டெயில்கேட்டில் உள்ள கண்ணாடி சிறியதாக உள்ளது.