'இந்தியாவின் முதல் 4 வால்வ் DTS-i இன்ஜின் கொண்ட பைக் ' என்ற பெருமையுடன் களம்கண்ட பல்ஸர் 135LS, ஷார்ப்பான டிசைன் - குறைவான எடை - பவர்ஃபுல் 4 வால்வ் இன்ஜின் - அதிரடியான விலை - சிறப்பான மைலேஜ் எனப் பல ப்ளஸ் பாயின்ட்களைக் கொண்டிருந்தது.
பஜாஜ் புதிய பல்ஸர் பைக்குகளை உருவாக்கிவருகிறது. மோனோ ஷாக் சஸ்பன்ஷன், FI தொழில்நுட்பம், ஏபிஎஸ் பிரேக் மற்றும் புதிய பிஎஸ்-6 இன்ஜின் என்று அப்டேட்டுகள் குவிந்துள்ளது. அடுத்த தலைமுறை பல்ஸராக இருக்கப்போகும் இவை 150 மற்றும் 220 மாடல்களின் மேல் கட்டமைக்கப்படுகிறது.
சமீபத்தில் ஆட்டோமெபைல் நிறுவனங்கள் தங்கள் கார் மற்றும் பைக்கின் விலைகளை உயர்த்திவருகின்றன. டிவிஎஸ் நிறுவனமும் கடந்த வாரம்தான் அப்பாச்சி RR310 பைக்கின் விலையை ரூ.8000 வரை உயர்த்தியிருந்தது. ஆனால், ஆச்சர்யமான இப்போது விலை குறைப்பு நடந்துள்ளது.
கடந்த வாரம் டொமினார் 400 பைக்கின் விலையை ரூ.2000 வரை அதிகரித்திருந்த இந்நிறுவனம். தற்போது அதன் பல்ஸர் RS200, அவென்ஜர், V, டிஸ்கவர் மற்றும் பிளாட்டினா பைக்குகளின் விலையையும் அதிகரித்துள்ளது. விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்று பார்ப்போம்.
இளைஞர்களின் கனவு பைக் நிறுவனமாக இருக்கும் கவாஸகி சமீபத்தில் தனது என்ட்ரி லெவல் பர்ஃபாமன்ஸ் பைக்கான நிஞ்சா 400 மாடலை வெளியிட்டுள்ளது. விலையைப் பொருத்தவரை நின்ஜா 300 மற்றும் z650 பைக்குகளுக்கு இடையில் நிற்கிறது நின்ஜா 400. வடிவத்தில் நின்ஜா H2 வரை போலவே டிசைன் செய்யப்பட்டுள்ளது. போட்டியாளர்களை விட பல மடங்கு விலை அதிகமாக இருக்கும் இந்த பைக்கின் சிறப்புகளை இதன் போட்டியாளர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்...
டிவிஎஸ் தனது அப்பாச்சி RR310 பைக்கின் விலையை ரூ.8000 வரை உயர்த்தியுள்ளது இந்நிறுவனம். கடந்த டிசம்பர் மாதம் ரூ.2.05 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட அப்பாச்சி RR310 பைக்கின் விலையை எந்த அறிவிப்பும் இன்றி 8000 வரை உயர்த்தியுள்ளது. தற்போது இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.13 லட்சம்.
ஹோண்டாவின் விற்பனை அடிப்படையில் வெற்றிகரமான பைக்காக இருக்கும் ஹார்னெட் கடந்த 2015 டிசம்பர் மாதம் வெளியானது. வெளியானது முதல் விற்பனையில் ஏறுமுகமாக இருக்கும் ஹார்னெட்டின் 2018-ம் ஆண்டு மாடல் தற்போது விற்பனைக்கு வந்துவிட்டது.
பஜாஜ் தனது டொமினார் 400 பைக்கின் விலையை ரூ.2000 வரை உயர்த்தியுள்ளது. புதிய வண்ணத்தில் டொமினாரின் 2018 மாடல் கடந்த ஜனவரி மாதம் விலையேற்றம் எதுவும் இல்லாமல் வெளியானது.
'முண்டாசுபட்டி' படத்தில் ஒரு கேரக்டராகவே வருமே அந்த பைக்தான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி. அந்தக்காலங்களில் ராயல் என்ஃபீல்டின் மார்க்கெட் சரிய காரணமே இந்த ஜாவா-எஸ்டி பைக்குகள்தான். மஹிந்திரா எப்போது இந்த பைக் நிறுவனங்களை வாங்கியதோ அப்போ இருந்தே இந்தியாவுக்குச் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்த்த ஜாவா பைக் மேட்டரில் இப்போ ஒரு அப்டேட்.
பஜாஜ் பல்ஸர் 150-ன் அடுத்த மாடல் வரப்போகிறது. இதற்கான ஸ்பை படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கின்றன. இந்த புதிய பல்ஸர் பைக்குகளுக்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கிவிட்டன.