தொழில்நுட்பம்


அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்!

அதிரடி அபராதம், தண்டனை! வருகிறது புதிய சட்டம்!

'சாலைப் போக்குவரத்து பாதுகாப்புச் சட்டம்2014’ என்பது தான். இது, மொத்தம் 15 பகுதிகள், 340 செக்‌ஷன்கள், 4 ஷெட்யூல்கள் கொண்டுள்ளது. எந்த ஒரு சட்டமும் அமல்படுத்துவதற்கு முன்பு, ஒரு வரைவாகத் தயாரிக்கப்பட்டு, அது பொதுமக்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், சட்டக் குழுக்கள் ஆகியோரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதன் பின்பு தேவைப்படும் திருத்தங்கள் செய்து, நாடாளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டு நிறைவேறிய பிறகுதான் சட்டமாகும். புதிய மோட்டார் வாகனச் சட்ட வரைவில் இடம்பெற்றுள்ள மாறுதல்கள் அனைத்தும், இந்தக் காலகட்டத்துக்கு ஏற்றதுபோல, அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்தப் புதிய சட்ட வரைவின்படி, தேசிய அளவிலான வாகன ஒழுங்குபடுத்துதல் மற்றும் சாலைப் பாதுகாப்பு அதிகாரம் கொண்ட ஒரு தேசிய கமிட்டிதான், இந்தியா முழுவதும் சாலைப் பாதுகாப்பு மற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியைச் செய்யும். இந்தக் கமிட்டி பயணிகள் பயணம் செய்யும் பஸ், வேன் போன்ற வாகனங்களின் அமைப்பு, இருக்கைகளின் அமைப்பு, பாதுகாப்பு போன்ற பல அம்சங்களை நெறிப்படுத்தும். நெறிமுறைகளுக்குக் கட்டுப்படாத வாகனங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் அதிகாரம், இந்த தேசிய கமிட்டிக்கு உண்டு.

வாகன விற்பனை... மலருமா மறுபடியும்? - டீலர்ஸ் மீட்!

வாகன விற்பனை... மலருமா மறுபடியும்? - டீலர்ஸ் மீட்!

உலக அளவில் ஆட்டோமொபைல் துறை கடுமையான சரிவில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை என்றாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மந்தமான நிலைதான். சாதனை என்றாலும் சரிவு என்றாலும் அதில் நேரிடையாக சம்பந்தப்படுவது டீலர்கள்தான். பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு, மின்வெட்டு போன்ற பிரச்னைகளில் தமிழகமே பாதிக்கப்பட்டிருந்தாலும், தொழில் நகரமான கோவையில் எப்படி இருக்கிறது கார், பைக் விற்பனை? கடந்த சில ஆண்டு விற்பனைகளை ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 40 சதவிகிதம் வரை கார், பைக் விற்பனை சரிந்துள்ளதாகக் கூறுகிறார்கள் டீலர்கள். புதிய ஆட்சி அமைந்ததும் எல்லாம் சரியாகிவிடும் என்றும் சிலர் ஆருடம் சொல்கிறார்கள்.

    Displaying 31 - 40 of 48